புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவது மூலமே தேசியத்தை கட்டியெழுப்பமுடியும்
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று குறிப்பிட்ட அவர் சபையின் புதிய அரசியல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பலமுறை வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.அதிகார மோகத்திலேயே கட்சிகள் செயற்பட்டு வருவது என்று அவர் கூறிப்பிட்டார். அவசரகால சட்டம் தொடர்பிலான ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரேரனை மீதான விவாதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.