பிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே
பிரெக்ஸிற்றை தீர்க்க வேண்டியது இப்போது புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமரின் பொறுப்பு என ஜூன் மாதம் 7 ஆம் திகதி பதவி விலகவுள்ள பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கை ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே பிரித்தானியாவுக்கு சிறந்தது எனவும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் பயணித்துள்ள பிரதமர் மே செய்தியாளர்களிடம் தெரிவித்துளளார்.
இருதரப்பிலுமுள்ள வலுவான திட்டங்களை உள்ளடக்கிய பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை கண்டறிந்து பிரெக்ஸிற்றை தீர்க்க வேண்டியது இப்போது புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமரின் பொறுப்பு எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காக போட்டியிடும் போட்டியாளர்களின் பிரெக்ஸிற் சார்ந்த கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு பிரதமர் மே மறுப்பு தெரிவித்து விட்டமை குறிப்பிடத்தக்கது.