பிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் வாய்ப்பு பொறிஸ் ஜோன்சனுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பையும் ,அவர் ஏற்பதற்கான வாய்ப்புகள் ,இருப்பதாக ‘டைம்ஸ்’ செய்திதாள் தெரிவித்துள்ளது.
முன்னதாக சுகாதார துறை செயளர் மெட் ஹென் கொக், பிரதமராகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கட்சி மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் அவருக்கு 20 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் பதவிக்காக போட்டியிடுபவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயர் அகற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பொறிஸ் ஜோன்சன் முதல் சுற்று வாக்கெடுப்பில் 114 வாக்குகளை பெற்றிருந்தார்.
பிரதமர் பதவிக்காக போட்டியிடும் ஏனையவர்கள் 50 இற்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர்.
இதேவேளை, பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜப்பானில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஜீ 20 உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்திக்கும்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதிய பிரித்தானிய பிரதமர் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...