Main Menu

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச், சிட்ஸிபாஸ், சோபியா, கிவிட்டோவா நான்காவது சுற்றில் வெற்றி!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டிகளில், ஜோகோவிச், சிட்ஸிபாஸ், ருபெல்வ், சோபியா கெனின் மற்றும் பெட்ரா கிவிட்டோவா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நோவக் ஜோகோவிச், 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் ஜோகோவிச், வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டீபனோஸ் சிட்ஸிபாஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சிட்ஸிபாஸ், 6-3, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரி ருபெல்வ், ஹங்கேரியின் மார்டன் ஃபுசோவிக்ஸ்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஹென்ரி ருபெல்வ், 4-7, 7-5, 6-4, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் சோபியா கெனின், பிரான்ஸின் பியோனா ஃபெரோவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், சோபியா கெனின், 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, சீனாவின் ஸாங் சூய்யை எதிர்த்து விளையாடினார்.

பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் பெட்ரா கிவிட்டோவா, வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.