பிரான்ஸில் தேசிய சேவை முன்னோட்டத் திட்டம் அறிமுகம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய சேவை முன்னோட்டத் திட்டத்தை பிரான்சில் அறிமுகம் செய்துள்ளார். இளையர்களிடையே நாட்டின் மீதான உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
2,000 தொண்டூழியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் சொந்தச் சீருடை வழங்கப்படும். தேசிய கீதத்துடன் அவர்களது நாள் ஆரம்பமாகும்.
15, 16 வயது மட்டங்களுடைய இளையவர்களிடையே தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த புதிய திட்டம் உதவும் என்று ஜனாதிபதி மக்ரோன் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
தேசிய சேவையை மேற்கொள்ளாத முதல் பிரான்ஸ் ஜனாதிபதியும் இவராவார். பிரான்சில் கட்டாயமாக இருந்த இராணுவ சேவை 1990 களின் பிற்பகுதியில் நீக்கப்பட்டது.