Main Menu

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற சபை தொடர்பான  பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் நிர்வாக சபை வைத்திய உத்தியோகத்தர் தொடர்பாக ஆராயப் பிரதமர் குழுவொன்றை நியமித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.