பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 14 பேர் பலி, பலர் படுகாயம்
பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் கவுட்டா நகரிலுள்ள பழச் சந்தையிலே் இன்று இடம்பெற்ற குறித்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகியுள்ளதோடு 15 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கையில்,
பாகிஸ்தானில் கவுட்டா நகரில் உள்ள பழச் சந்தைப் பகுதியில் இன்று குண்டு வெடித்ததுள்ளது.
இக் குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். 15 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காலை 7. 35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளதோடு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.