பரிஸ் கத்திக்குத்து: முக்கிய குற்றவாளிக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு எதிரப்பு தெரிவித்து, இரு சகோதரர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
பத்திரிகையின் முன்னாள் அலுவலகம் அமைந்துள்ள வீதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் முக்கிய குற்றவாளிக்கு எதிராக பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 வயதுடைய ஸாஹிர் ஹஸன் மஹ்மூத் என்ற குற்றவாளி, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸாஹிர் ஹஸன் மஹ்மூத்தை கைதுசெய்த பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அண்மையில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் இறைதூதர் தொடர்பாக வந்திருந்த கேலிச் சித்திரம் சினத்தைத் தூண்டியதால் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையின் போது ஹஸன் மஹ்மூத் தெரிவித்தார்.
நீதிபதி, மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் ஆதாரங்களை ஆராய்ந்து, குற்றவாளிக்கு ‘படுகொலை முயற்சிகள்’ பிரிவில் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தாக்குதலில் ஈடுபட்ட ஹஸன் மஹ்மூத் 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதும், இந்த அடையாளங்களில் சில குழப்பம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான கேலிச் சித்திரத்துக்கு எதிரப்பு தெரிவித்து, இரு சகோதரர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.