பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!
பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு – காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வேதச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுத்தியுள்ளது.
அதேநேரம் குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய டிரோன்களை பயங்கரவாத குழுக்கள் மோசமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடி ஆபத்து மற்றும் சவாலாக மாறியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் வி.எஸ்.கே.கவுமுடி தெரிவித்தார்.
வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளில் சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறத்தினார்.