Main Menu

பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவு

பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பப்புவா நியூகினிய பிரதமர் பீற்றர் ஓ நீல் நேற்று(புதன்கிழமை) தனது பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே முன்னாள் நிதியமைச்சரான ஜேம்ஸ் மராபேயை பப்புவா நியூகினிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமராக தெரிவு செய்துள்ளனர்.

எரிவாயுத்திட்டம் ஒன்று தொடர்பாக, முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் ஜேம்ஸ் மராபே தமது நிதியமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகள் தங்கவைக்கப்படும் ஒரு பகுதியாக பப்புவா நியூகினியா காணப்படுகின்றது.

இங்கு அதிகளவான இலங்கையர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.