Main Menu

பசி விரக்தியால் வீதிகளில் இறங்கி போராடும் லெபனான் மக்கள்!

நாடு அதன் நாணயமான பவுண்டின் சரிவை எதிர்கொண்டுள்ள நிலையில், லெபனான் முழுவதுமுள்ள நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அழைத்துள்ளார்.

போராட்டங்கள் ஆரம்பமான கடந்த ஆண்டு ஒக்டோபரிலிருந்து, லெபனான் பவுண்ட் அதன் மதிப்பில் 70 சதவீதம் சாதனை தாழ்வாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இரண்டு நாட்களில், நாணயம் அதன் மதிப்பில் 25 சதவீதத்தை இழந்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழைப்பை ஹசன் டயபின் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.

பொருளாதார நிலைத்தன்மையின்மை, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற காரணங்களால் லெபனானின் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, விதிக்கப்பட்டுள்ள முடக்கநிலை காரணமாக குறித்த அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் ஓய்ந்திருந்தன. தற்போது முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் மீண்டும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல் சில மாதங்களுக்கு எதிர்ப்புக்கள் அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும், இப்போது அவை பசி குறித்த விரக்தியால் உந்தப்படுகின்றன.

நகர மையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு கூடியிருந்த போராட்டக்காரர்கள், வீதிகளில் டயர்களை எரித்தும், வீதிகளை தடுத்தும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

டக்கு அக்கார் மற்றும் திரிப்போலியில் இருந்து மத்திய ஜூக், கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு, பெய்ரூட் மற்றும் தெற்கு டயர் மற்றும் நபாதீஹ் வரையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு நகரமான திரிப்போலியில், அமைதியை மீட்டெடுக்க முயன்ற படையினர், எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டனர். வங்கிகளிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன, அவை லெபனானின் நிதி சிக்கல்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேபோல, போராட்டக்காரர்கள் மத்திய வங்கியின் ஒரு கிளைக்கு தீ வைத்தனர். பல தனியார் வங்கிகளை சூறையாடினர் மற்றும் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினருடன் மோதினர். இதன்போது, திரிப்போலியில் மட்டும் 41 பேர் காயமடைந்ததாக லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

லெபனான் பவுண்டின் தேய்மானம் பல தசாப்தங்களாக நாட்டை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. கடினமான நாணய சேமிப்பை நம்பியுள்ள பல லெபனான் குடிமக்கள், வறுமையில் விழுந்துள்ளனர். அவர்களின் நிலை தொற்றுநோயால் மோசமடைந்துள்ளது.

வேலையின்மை அதிகமாக உள்ளது மற்றும் வேலை செய்யும் பெரும்பாலான லெபனானியர்களுக்கு உள்ளூர் நாணயத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது. இது அதன் மதிப்பை இழந்து, உணவு மற்றும் பிற அடிப்படை பொருட்களை பல குடும்பங்களுக்கு கட்டுப்படுத்த முடியாததாக ஆக்குகிறது.

ஆனால், பலர் 5 மில்லியன் மக்கள் வாழும் இந்த சிறிய நாட்டில் 1975ஆம் ஆண்டில் லெபனான் உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதற்கு முந்தைய காலத்தை நினைவூட்டுவதாகவும், பதற்றங்கள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கவலை எழுந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

பகிரவும்...