Main Menu

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஹிஸ்புல்லாவுக்கு ஹக்கீம் அழைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் மீது முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் முன்வைத்­துள்ள விமர்­ச­னங்கள் தொடர்பில் பகி­ரங்­க­மாக ஒரே மேடையில் பேசு­வ­தற்கு வரு­மாறு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் சவால் விடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக  அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,   முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் காத்­தான்­குடி மற்றும் ஏனைய பிர­தே­சங்­களில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான பிர­சாரக் கூட்­டங்­களில்  நான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்­பாக கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன் வைத்து வரு­கின்றார்.

நான் ஒரு பச்­சோந்தி என்றும் துரோகி என்றும் பெரும் காட்டிக் கொடுப்பு என்றும் என் மீது மிக மோச­மான விமர்­ச­னங்­களை அவர் தொடுத்து வந்­தி­ருக்­கின்றார்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் நான் பெட்­டிப்­பாம்­பாக போன­தா­கவும் ஒரு வார்த்தை கூட பேச­வில்­லை­யெ­னவும் என்னை அவர் காப்­பாற்­றினார் என்றும் எனது பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக நான் பேச விரும்­ப­வில்லை எனவும் அதில் இடம்பெற்­றுள்ள ஊழல் தொடர்பில் நான் கதைக்க விரும்ப வில்லை எனவும் ஹக்கீம் பேசி வந்­ததை நான் பார்த்தேன்.

இதற்கு நான் அவ­ருக்கு பதி­ல­ளிக்க தொடங்­கு­கின்றபோது முஸ்லிம் சமூ­கத்­துக்­குள்ளே ஒரு பிளவை அல்­லது நாங்­களே எங்­களை விமர்­சனம் செய்­கின்ற நிலையை இந்த தேர்தல் காலத்தில் ஏற்­ப­டு­வதை நான் விரும்பவில்லை.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் மிகுந்த மரி­யா­தையும் கௌர­வமும் நான் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது வைத்­துள்ளேன்.

 ஆகவே நாங்­க­ளி­ரு­வரும் ஒரே மேடை­யிலே நான் ஏன் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன். இந்த சமூ­கத்­துக்கு கிடைக்க வேண்­டிய நன்மை என்ன என்­பது தொடர்­பா­கவும் நான் எந்த வகை­யி­லான பச்­சோந்தி, எவ்­வா­றான காட்டிக் கொடுப்­புக்­களை செய்தேன். 

எந்த வகையில் இந்த சமூ­கத்­துக்கு துரோகம் செய்தேன். ஏப்ரல் 21 தாக்­கு­த­லுக்கு பின்னர் பெட்­டிப்­பாம்­பாக பேசாமல் இருந்­தேனா? இந்த தேர்­தலில் நான் போட்­டி­யி­டு­வதன் மூலம் எவ்­வாறு இந்த சமூ­கத்­துக்கு துரோகம் இழைத்­துள்ளேன். யாரைக் காட்டிக் கொடுத்­துள்ளேன் என நீங்கள் கூறிய விட­யங்­க­ளுக்­கெல்லாம்  நாங்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பேசு­வ­த­னூ­டாக மக்­க­ளுக்கு தெளிவுபடுத்­த­மு­டியும்.

நாமி­ரு­வரும் ஒரே மேடையில் பேசுவோம்.  அம்­பாறை மாவட்­டத்­திலே நீங்கள் விரும்­பு­கின்ற ஒரு பிர­தே­சத்­திலே நீங்கள் விரும்­பு­கின்ற நேரத்­திலே நான் உங்­க­ளோடு பேசு­வ­தற்கு ஆயத்­த­மாக இருக்­கின்றேன்.

தயவு செய்து அதற்­கான காலத்­தையும் இடத்­தையும் நீங்கள் தெரிவு செய்­யுங்கள். அதற்கு தேவை­யான சகல ஒழுங்­கு­க­ளையும் மேற் கொள்ள நான் ஆயத்­த­மாக இருக்­கின்றேன். இன்­றி­லி­ருந்து ஏழு நாட்­க­ளுக்குள் நானும் நீங்­களும் ஒரே மேடையில் பேசுவோம். இது வெறு­மனே பேச்சு மாத்­திரம் தான். சமூ­கத்­திலே இருக்­கின்ற முக்­கி­ய­மான புத்தி ஜீவி­கள், உல­மாக்கள், கல்­வி­மான்கள் முன்­னி­லையில்   நாமி­ரு­வரும்  பேசுவோம்.

உண்­மை­யி­லேயே இந்த தேர்­தலில் நான் போட்­டி­யி­டு­வது உங்­களைப் பொறுத்த வரையில் பாரிய துரோகம், சமூகக் காட்டிக் கொடுப்பு, பச்­சோந்­தித்­தனம் என நீங்கள் சொல்­வதை  அதன் போது மக்­க­ளிடம் சொல்­லுங்கள். நான் இந்த தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்றேன் என மக்கள் மத்­தியில் சொல்­வ­தற்கு ஆயத்­த­மாக இருக்­கின்றேன். அதனை மக்கள் தீர்மானிக்கட்டும்.

மேடைகளைப் போட்டு நீங்கள் என்னை ஏசுவதையும் உங்களுக்கு நான் பதிலளிப்பதையும் தவிர்த்து விட்டு உடனடியாக இன்றிலிருந்து ஏழு நாட்க ளுக்குள் உங்களின் பதிலை எதிர்பார்க் கின்றேன். ஆதரவாளர்கள் ரவூப் ஹக்கீமை இதற்காக தூண்டவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.