நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து 55 பேர் உயிரிழப்பு
நைஜீரியா விமான நிலையம் அருகே பாரவூர்தி வெடித்து சிதறியதில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் நியாமியில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே டேங்கர் லாரியொன்று வெடித்து சிதறியது என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 55 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்தில் சிக்கி கவிழ்ந்துள்ளது. பொதுமக்கள் பெட்ரோலை சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது வெடிவிபத்து நேரிட்டது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.