நெல்லியடி பஸ் நிலையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இரண்டாம் நாள் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் நேற்று செவ்வாய்க்கிழமை (13) நெல்லியடி பஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டதுடன், சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.