நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் நாடாளுமன்றில் முறுகல் நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைக்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த குழு நேற்று ஒன்றுகூடிய நிலையில், விசாரணை அறிக்கையை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.