நவம்பர் 13 தாக்குதல்! – இறுதி தீர்ப்பு!
”நவம்பர் 13” பயங்கரவாத தாக்குதலை அத்தனை எளிதில் எவரும் மறந்துவிட முடியாது. 130 பேரின் உயிரை காவு வாங்கிய அந்த கோர தாக்குதலின் இறுதிக்கட்ட தீர்ப்பு நாளை மறுநாள் புதன்கிழமை ஆரம்பிக்கின்றது.
இந்த தீர்ப்பு முன் எப்போதும் இல்லாதவாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மிகப்பெரும் சரித்திரமாக உள்ளது. ஏன்..? இப்பதிவில் காணலாம்.
* 130 பேர் கொல்லப்பட்டும், 400 பேர் வரை காயமடைந்தும் உள்ள இந்த தாக்குதல் 2015 ஆம் ஆண்டு தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்றது.
* இறுதிக்கட்ட தீர்ப்பு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
* ஒன்பது பயங்கரவாத தடுப்பு பிரிவு நீதிபதிகள் சிறப்பு பணி ஆற்றியுள்ளனர். அவர்களே தீர்ப்பும் வாசிப்பார்கள்.
* கிட்ட்டத்தட்ட 542 பகுதிகளை கொண்ட இராட்சத கோப்புகள் இந்த வழக்கு தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள் இதில் அடங்கியுள்ளன.
* இந்த பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்ட முக்கிய குற்றவாளிகளாக 20 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களில் பயங்கரவாதி Salah Abdeslam -உம் ஒருவன்.
* ’சிவில் கட்சிகளைச் சேர்ந்த 1.800 பேர் இந்த தீர்ப்பின் போது கலந்துகொள்கின்றனர்.
* மொத்தமாக 300 வழக்கறிஞர்கள் மற்றும் 141 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
* ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த வழக்கு நடைபெறும். சில விதிவிலக்கான திங்கட்கிழமைகளும் உண்டு.
* வழக்கு இடம்பெறும் நாட்களில் முதல் அமர்வு நண்பகல் 12.30 மணிக்கு ஆரம்பிக்கும்.
* இந்த வழக்கு இடம்பெறுவதற்காக பிரத்யேகமாக புதிய நீதிமன்றம் ஒன்று Ile de la Cité பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இடம்பெற்று வந்த இந்த நீதிமன்றம் அமைக்கும் பணிகள் கடந்த வாரத்தில் நிறைவுக்கு வந்தன.
* இந்த தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் 45 மீற்றர் நீளமும், 15 மீற்றர் அகலமும் கொண்டது. மொத்தம் 550 இருக்கைகள் கொண்டது. இந்த வளாகத்துக்குள் உள்ள ஒவ்வொரு சதுர மீற்றரும் தனி தனியே ஒலி வாங்கி கொண்டது. ஒலிவாங்கி பதிவு செய்யும் வசதியும் கொண்டது.
* அதேவேளை, இந்த நீதிமன்றம் 15 அறைகளையும் கொண்டது.
* இந்த ஒன்பது மாத கால வழக்கும் காணொளிகளாக பதிவு செய்யப்பட உள்ளன. இதற்காக தனியே மிக துல்லியமான கமராக்களும், ஒலிப்பதிவு மைக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கட்டுப்பட்டுத்த மிக பாதுகாப்பான கட்டுப்பாட்டு அறையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் முன்னர் எப்போதும் ஒரு வழக்கு இடம்பெற்றதில்லை. இதனாலேயே இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக உள்ளது.