நல்லை ஆதீன முதல்வரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்
யாழ்ப்பாணம் நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது.
வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் சந்திப்பில் இருவரும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.