Main Menu

நகைச்சுவை துணுக்குகள்

கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே? 


ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான். 


டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு??????? 
படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…

யார்..வில்லனா? கதாநாயகனா?..

தயாரிப்பாளர்.. 


அப்பா: “ரேங் கார்ட் எங்கடா?” 

மகன்: “இந்தாங்கப்பா ரேங் கார்ட்” 

அப்பா: “அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா” 

மகன்: “சரிடா மச்சான், கையெழுத்து போடு” 


“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி” 


மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?… 


கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!

மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..

கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்! 


ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,

கொக்கரக்கோ கும்மாங்கோ! 


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும். 


“கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?”

“சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்” 


என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது. 


உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் . 


செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. 


“நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா…!”

“பெண் அவ்வளவு அழகா?” “இல்லடா… விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா…!” 


பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு….
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…
கேர்ள்: ?!?…. 


டாக்டர்: “நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக் 
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்”

நோயாளி: “டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்” 


என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?”

“ரெண்டாவது ‘ஷாக்’ எதுக்குன்னு, தான்..!” 


நண்பர் – 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா…
நண்பர் – 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் – 1: அவளோட தங்கச்சியைத்தான்….
நண்பர் – 2: ?!?………….. 


கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம். 


கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை. 

மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்! 


ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது…. 


1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS…. 


ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது…
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை…
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல…
ஆசிரியர் அடிக்கிறார்…
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது…. 


“அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?” 

“அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!” 


பிச்சைக்காரர்: “அம்மா தாயே… பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை.”

வீட்டுக்காரம்மா: ” பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா…
எனக்கு காது கேட்காது.” 

பகிரவும்...