தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்

தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவாகியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர்.
இதனிடையே, அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவைத் தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...