தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விடயம்- உடனடி விசாரணைகளை கோரியது சுவிஸ்
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என சுவிஸ்இன்போ என்ற செய்தி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட பெண்; ஊழியரை திங்கட்கிழமை கடத்தியவர்கள் இரண்டு மணிநேர விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர் என அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இதனை உறுதி செய்துள்ளதுடன் எழுத்துமூல பதிலொன்றை வழங்கியுள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.
தூதரகம் தொடர்பான தகவல்களை தெரிவிக்குமாறு தூதரக பணியாளரை அச்சுறுத்தினார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த விடயத்தை இலங்கையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது,இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான உடனடி விசாரணைகளை கோரியுள்ளோம் என சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் சுவிட்சர்லாந்திற்கான இலங்கை தூதுவரை சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு விளக்கம் கோருவதற்காக அழைத்துள்ளது.
பகிரவும்...