துனிசியாவிலிருந்து 43 பேருடன் படகு மூழ்கி விபத்து!
துனிசியாவிலிருந்து படகு மூழ்கிய விபத்தில் நாற்பத்து மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபிய துறைமுகமான ஜுவாராவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பாவை அடைய மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 84 பேரை துனிசிய கடற்படை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மூன்று முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என துனிசியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை இரவு பயணம் செய்த குறித்த படகு எகிப்து, சூடான், எரிட்ரியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.