தீ விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்திடம் இருந்து நட்ட ஈடு
தீப்பற்றலுக்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு 442 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகை தீ அணைப்பிற்கு ஏற்பட்ட செலவிற்கான தொகையே அன்றி, கடல் மாசு ஏற்பட்டமைக்கான நட்ட ஈட்டு தொகை அல்ல என சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பகிரவும்...