Main Menu

திருக்குறள் விழா

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும்  கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களமும்  இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் விழா நேற்று (16-04-2021) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றுள்ளது .


மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த திருக்குறள் விழாவில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன்  கலந்துகொண்டு விழாவின் ஆரம்ப சுடரினை ஏற்றி வைத்ததுடன் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை  அணிவித்தாா்.

இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன இதில் திணைக்கள தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் சமய தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்

பகிரவும்...