Main Menu

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

தேசியதவ்ஹீத்ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்துகைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில்ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத்தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

DSC 9440 1

உயிர்த்தஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட்சஹரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

DSC 9635

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையபயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரான் என்பவரின் சாரதிகைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கபூர் என்றழைக்கப்படும் மொஹம்மட் ஷரீவ் காத்தான் குடி பிரதேசத்தில்கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நீர்கொழும்பு பிரதிநகர முதல்வர்மொஹமட்அன்சார் ஆயுதங்கள் பலவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்கள் கத்திகள் மற்றும் 38கையடக்கத் தொலைபேசிகளுக்கான பட்டறிகள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.