தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள்
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் உள்ள பல ஐந்து நட்சத்திர ஆடம்பர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி, சினமன் கிரான்ட், ஷங்ரி-லா விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று குண்டுகள் வெடித்திருந்தன.
இந்தக் குண்டுவெடிப்புகளால் மேற்படி விடுதிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து. கொழும்பு நகரில் உள்ள பல ஐந்து நட்சத்திர விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
பெரும்பாலான விடுதிகளின் முன்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.