தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தை தீவிரமாக அமுல்படுத்தும் வகையிலும் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சுமாா் 1.20 இலட்சம் பொலிஸார பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
இவா்கள் முக்கியமான வீதிகள், முக்கியமான சந்தைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசர தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வந்தால் வழக்குப் பதியப்படும் என தமிழக பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை.
தமிழகத்தில் 6ஆம் கட்ட ஊரடங்கு தற்போது அமு்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் கடந்த சில வாரங்களில் இருந்து அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றும் தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.