தடம் புரண்ட RER B ! : இன்று போக்குவரத்து தடை சந்திக்க நேரும்?
நேற்று புதன்கிழமை மாலை RER B தொடருந்து விபத்துக்குள்ளானது. அதிஷ்ட்டவசமாக இதில் எவரும் காயமடையவில்லை. நேற்று மாலை 7 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றது. இது தொடர்பாக RATP தெரிவிக்கையில், Denfert-Rochereau நிலையத்தில் இருந்து தொடருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், விபத்துக்குள் சிக்கியது. RER B தொடருந்தின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன. அதைத் தொடர்ந்து Laplace மற்றும் Port Royal நிலையங்களுக்கிடையே போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
அதேவேளை, கார் து நோர் தொடருந்து நிலையத்துக்கான ‘உள்ளக தொடர்பும்’ (L’interconnexion) பகுதியும் தடைப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து RER B சேவை இன்று வியாழக்கிழமை பலத்த போக்குவரத்து தடையை சந்திக்க நேரும் என RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் வரையான மக்கள் இதில் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.