ஜெர்மனியில் உக்ரைன் அகதிகள் மையத்தில் தீ விபத்து
ஜெர்மனியில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த அகதிகள் மையம் ஒன்றில் தீப்பற்றி எரிந்துள்ளது.
அதன் பின்னணியில் சதி ஏதேனும் உள்ளதா என பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கருகில் அமைக்கப்பட்டிருந்த உக்ரைன் அகதிகளுக்கான அகதிகள் மையம் ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.
தீ அருகிலிருந்த முகாம்களுக்குப் பரவும் முன் தீயணைப்பு வீரர்கள் விரைவாகத் தீயை அணைத்தனர்.
அந்த மையத்தில் சிறுவர்கள் உட்பட சுமார் 300 பேர் தங்கியிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்த தீவிபத்தின் பின்னணியில் சதிவேலை ஏதாகிலும் உள்ளதா என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
பகிரவும்...