ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலிமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் அருகில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்பட பலர் உள்ளனர்.