Main Menu

ஜூலை 10 முதல் அவசர சுகாதார நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் அரசு தீர்மானம்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசர சுகாதார நடவடிக்கைகளை ஜூலை 10 ஆம் திகதியில் இருந்து நிறுத்தி வைப்பது குறித்து பிரான்ஸ் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் எட்வேர்ட் பிலிப்பின் அலுவலகம், ஜூலை 10 ஆம் திகதி தற்போது ஆராயப்பட்ட பல விருப்பங்களில் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், விடுதிகள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதால், பிரான்ஸ் அதன் முந்தைய கடுமையான முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, வெளியில் இருக்கும்போது முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்யும் அதே வேளையில், ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட உத்த்ஹியோகப்பூர்வ தகவல்கள், பிரான்ஸில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 29,296 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.