ஜுன் 2 இற்குப் பின்னரும் RER- மெட்ரோக்களில் தொழில் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம்
உள்ளிருப்பு வெளியேற்றத்தின் இரண்டாம் கட்ட நடைமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும், தண்டவாளங்களில் ஓடும் பொதுப் போக்குவரத்துக்களில் (RER, Train, Metro) காலை 6h30 – 9h30 இற்கிடையிலும், மாலை 16h00 இலிருந்து 19h00 வரையிலும் பயணிப்பவர்கள் வழமை போல் கட்டாயமாக வேலை செய்யும் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் (attestation employeur) வைத்திருத்தல் அவசியம் என்று, அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பான செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார்.
அத்துடன் தொடர்ந்தும் பொதுப் போக்குவரத்துக்களில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் எனவும், தொடருந்து நிலையங்களில், காவற்துறையினர், வேலை செய்யும் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.