ஜப்பானில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரதமர் ஹோஷிஹைட் சுகாவின் கட்சி தோல்வி
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
பிரதமர் ஹோஷிஹைட் சுகாடோக்கியோ:
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கீழ் அவையில் ஒரு இடத்துக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் வெளியாகின.
இதில் 3 இடங்களிலும் பிரதமர் ஹோஷிஹைட் சுகா தலைமையிலான ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்தித்தது. 3 இடங்களையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றின.
இந்த நிலையில் தேர்தல் தோல்வியை பணிவுடன் ஏற்று கொள்வதாக பிரதமர் ஹோஷிஹைட் சுகா கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மக்களின் தீர்ப்பைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து திருத்த வேண்டிய விஷயங்களை ஆராய்வேன். அதேசமயம் ஜப்பான் தற்போது கொரோனா வைரசால் 3-வது அவசரகால நிலையை எதிர்கொண்டு வருவதால் ஜப்பானை பாதித்த தொற்றுநோயை எதிர்ப்பதே எனது பதவியில் எனது முக்கிய முன்னுரிமை ஆகும்’’ என்றார்.