Main Menu

ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஆன் இதால்கோ

இதுவரை பரிஸ் நகர முதல்வராக அறியப்பட்ட ஆன் இதால்கோ, இன்று… 2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்துள்ளர்.

இது தொடர்பான செய்திகள் முன்னதாகவே வெளியாகியிருந்த போதும், உத்தியோகபூர்வமாக இதுவரை ஆன் இதால்கோ அறிவிக்கவில்லை. இந்நிலையில், Rouen நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆன் இதால்கோ, அங்கு வைத்து தனது பெயரை வேட்பாளராக அறிவித்தார்.

‘இன்று நான் தயாராகிவிட்டேன். என்னைச் சுற்றியுள்ள இந்த பெயர் உந்து சக்தியால் நான் இந்த முடிவை எட்டியுள்ளோன். மிகவும் யதார்த்தமான மக்கள் ஆட்சியை தருவதற்காக நான் என்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளோன்!’ என ஆன் இதால்கோ தெரிவித்தார்.