Main Menu

சோம்ப்ஸ்-எலிசேயில் trottinettes செலுத்தினால் 135 யூரோக்கள் தண்டப்பணம்!

சோப்ம்ஸ் எலிசே வீதியில் trottinettes என அழைக்கப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருட இறுதி கொண்டாட்டங்கள் மற்றும் கிருஸ்துமஸ் சந்தைகள் போன்ற நிகழ்வுகளுக்காக சோம்ப்ஸ்-எலிசே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை ஆரம்பித்து வைத்தார். இந்நிலையில், இங்கு trottinettes பயணிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவித்த பரிஸ் காவல்துறையினர், இந்த தடையை மீறி பயணித்தால் முதல் தடவை 135 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், மூன்றாம் முறை பயணித்தால் 3,750 யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...