சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவாரத்தை!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவடைந்து வருகின்ற நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 10 நாட்களில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிப்பது மற்றும் சூழலை கண்காணித்து படிப்படியாக அனுமதிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.