சீனா முன்பதிவில் ஒரு கோடியை கடந்தது ‘2.0’படம்
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள ‘2.0’ படம் எதிர்வரும் 6 ஆம் திகதி சீனாவிலுள்ள 47000 திரைகளில் வெளியாக உள்ளது.
குறித்த படத்துக்கான முன்பதிவு கடந்த வாரம் ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் இதுவரையில் நடந்துள்ள முன்பதிவு ஊடாக 1 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் படம் வெளியாகிய பின்னர் வரும் விமர்சனங்களைப் பொறுத்தே வசூல் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சீனாவில் ஹிந்திப் படங்கள் மாத்திரமே நல்ல வசூலை தொடர்ந்து அள்ளி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.