சிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்
சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.விமானப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமது விமானங்களில் ஸ்கை மார்ஷல்களை பணியில் ஈடுபடுத்துமாறு சிறிலங்கன் விமான சேவை அதிகாரிகள், சிறிலங்கா விமானப்படையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் தற்போதுள்ள வரையறை ஒழுங்குகள், அனைத்துலக சட்ட நடைமுறைகளை மதிப்பீட செய்து வருவதாக சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா விமானப்படை, கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.