Main Menu

சிங்கப்பூர் – 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரின் 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் அந்நாட்டின் பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என சிங்கப்பூரின் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பிரதமர் லீ சியன் லூங், கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை ஓரளவுக்கு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால் பொதுத் தேர்தலை இப்போது நடத்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.

தேர்தலுக்குப் பின்னர், கொரோனாத் தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளியல், வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள  முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்தலை நடத்துவதற்காான முடிவை எடுப்பதற்கு முன் வாக்காளர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் குறித்தும் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வேட்புமனு தாக்கல் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் என பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள நிலையில் வாக்களிப்பு ஜூலை 10 ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares