சாய்ந்தமருது பகுதியில் 15 பேரின் சடலங்கள் மீட்பு
கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 3 பெண்களின் சடலங்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் நேற்றிரவு முதல் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் காணப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.