Sat. Apr 20th, 2019

சாதனைப் பட்டியலில் மீண்டும் இடம்பிடித்த பிரான்ஸ்

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதந்த நாடு என்ற சாதனையை பிரான்ஸ் பெற்றுள்ளது.

இதற்கமைய 2018ஆம் ஆண்டு 438.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 9 மில்லியன் அதிகமாகும்.

2018ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பிரான்ஸில் பல்வேறு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக யெலோ வெஸ்ட் போராட்டம் இடம்பெற்ற நவம்பர் தொடக்கம் டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.1 வீதத்தால் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: