சர்ச்சைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் விஜயம்!- காங்கிரஸ் விமர்சனம்

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்சிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரான்சிலிலிருந்து ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்யும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் நேற்று (புதன்கிழமை) இரவு பிரான்சிற்கு புறப்பட்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இருதரப்பு உறவுகள், ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இரு நாடுகளும் இணைந்து போர் தளபாடங்களை தயாரிப்பது ஆகிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சரின் பிரான்ஸ் விஜயம், காங்கிரஸ் தரப்பில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரபேல் போர் விமான கொள்வனவு தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கோரியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் பிரான்ஸ் பயணிப்பது எதற்காக என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !