சமூக ஊடகங்களை முற்றாகத் தடை செய்வேன் – சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின் அவற்றை முற்றாகத் தடை செய்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மீதான தடையை இன்று நீக்குவதற்குத் திட்டமிட்டோம். ஆனால், நேற்றும் பெருமளவு தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. எனவே, அதனை மீள்பரிசீலனை செய்கிறோம்.
சமூக ஊடகங்களின் தலைவர்களை நான் இன்று சந்திக்கவுள்ளேன், இதனைக் கட்டுப்படுத்தாவிடின் சமூக ஊடகங்களை முற்றாகவே தடை செய்வேன்” என்றும் சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டார்.