Main Menu

கோட்டாபய தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட ஒருவர்- சுப்ரமணியன் சுவாமி

இலங்கையில் நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான பார்வை கொண்ட ஒருவரென பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோட்டாபய வெற்றியடைந்துள்ளமையானது இந்தியாவுக்கு சிறந்ததொன்று எனவும் சுப்ரமணியன் சுவாமி அதில் பதிவேற்றியுள்ளார்.

இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடியும் கோட்டாபயவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.