கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை: பிரான்ஸ் அறிவிப்பு!
கொவிட் சுகாதாரக் கடவுச் சீட்டு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
வெளிநாடு செல்வதற்கும், நாட்டிற்குள் நுழைவதற்கும் பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது சுகாதாரக் கடவுச் சீட்டினை கட்டாயமாக்கியுள்ளது.
இந்தநிலையில், இதற்கு தற்போதைக்குச் சாத்தியமில்லை என பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியக வர்த்தகங்களிற்கான அமைச்சர் ஃபிராங்க் ரைஸ்டர் கூறுகையில்,
‘பிரான்ஸின் தடுப்பூசித் திட்டம் ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் அனைவரிற்கும் தடுப்பூசிகள் வழங்குவது தற்போதைக்குச் சாத்தியமில்லை. அனைவரிற்கும் தடுப்பூசிகள் போடாமல், கொரோனாத் தடுப்பூசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது சுகாதாரக் கடவுச் சீட்டு வழங்க முடியாது’ என கூறினார்.
பிரான்ஸில் இன்னமும் 10 சதவீதம் மக்கள் மட்டுமே இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையாக 75 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள் பெருமளவில் பயணம் செய்யப்போவதில்லை. வெளிநாடுகளிற்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களிற்கு இப்போதைக்குத் தடுப்பூசிகள் கிடைக்கப் போவதில்லை.