கொரோனா – நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடு
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் நெதர்லாந்து அரசாங்கம் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெதர்லாந்து மக்கள் வியாபார நிலையங்களுக்குள் பாதுகாப்பு முகக்கவசங்களை அணிவதற்கு முதன் முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 17 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நெதர்லாந்தில் கடந்த வாரத்தின் முதல் பகுதியில் இருந்து தினமும் 3 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நெதர்லாந்தில் நேற்று(செவ்வாய்கிழமை) முதல் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நீடிக்குமென என அறிவிக்கப்பட்டுள்ளது.