கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கையில் சந்தேகம் – ஐக்கிய மக்கள் சக்தி !
அரசாங்கம் நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பான அறிக்கை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
மேலும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளால் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்றுகள் இப்போது கண்டியில் உள்ள புனித இடங்களில் பரவி வருவதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் தவறான அணுகுமுறையினால் 260 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆகவே இந்த இறப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், உடனடியாக சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பகிரவும்...