Main Menu

கொரோனா தொற்றுக்குள்ளான சஜித் விரைவில் குணமடைய வேண்டும் – ஜனாதிபதி மற்றும் பிரதமர் ருவிட்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, அவர்கள் இருவரும் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது பாரியார் ஆகியோர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் மீணடுவர வேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

I wish the opposition leader @sajithpremadasa & his wife a speedy recovery from #covid19.

May the noble triple gem bless them! pic.twitter.com/IRnPtoC0qJ

— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 23, 2021


My prayers are with the Opposition Leader @sajithpremadasa and Mrs. Jalani Premadasa who have tested positive for #COVID19. I wish them both good health and a full and speedy recovery. May the Triple Gem bless you.

— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 23, 2021

தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது முகப்புத்தகத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.