கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – இன்று ஊரடங்கு அமுல்
கேரளாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காய்கறி, மருந்து, பால் போன்ற அத்தியாவசியமான பொருட்களை விற்கும் கடைகள் இன்று திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவசர பணிகளுக்கு செல்வோர் வாகனங்களில் தக்க ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்காக தொலைதூரப் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.