குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!
குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்த விசாரணைகளை ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரின் கருப்பு பெட்டியை கண்டுப்பிடித்து விசாரணைகள் மேற்கொண்டது.
தற்போது விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த அறிக்கையை சட்டரீதியாக ஆய்வு செய்து விரைவில் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.