குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 207 பேர் உயிரிழப்பு, 450 பேர் காயம்!
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, 450 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். இதில் நீர்கொழும்பிலேயே அதிகபட்ச உயிரிழப்பாக 104 பதிவாகியுள்ளது.
6 குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக மாத்திரமே உறுதியான தகவல்களை தெரிவிக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் 66 பேர் உயிரிழந்ததோடு, 260 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் 104 பேர் உயிரிழந்துள்ளதோடு 100 பேர் காயமடைந்துள்ளனர். ஏனைய இடங்களில் 28 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.